புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி இணைந்தது!




நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி இணைந்ததாக அக்கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (அமீனி) தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப நாட்டை நேசிக்க கூடிய பொது மக்களின் பூரண ஆதரவுடன் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ள அரசியல் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சனயாப்பா,பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மற்றும் கௌரவ அமைச்சர் நலின் பெனான்டோ அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய கூட்டணியில் 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், மற்றும், சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும்,இணைந்திருப்பதாகவும் சுமார் 77 பாராளுமன்ற உறுப்பினர்கள், இணைந்து செயல்பட இருப்பதாகவும் நாடளாவிய ரீதியில் இந்தக் கூட்டணியை விஸ்தரிக்க இவர்களோடு சேர்ந்து ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி மும்முரமாக அரசியலில் இணைந்து செயல்பட உள்ளதாகவும், மேலும் இந்தக் கூட்டணியின் நோக்கம் குடும்ப அரசியல் இல்லாத ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதும் அந்தத் தலைமைத்துவம் நாட்டு மக்களையும் நாட்டையும் நேசிக்கக் கூடிய ஒருவரை உருவாக்க இருப்பதாகவும் தொடர்ச்சியாக நாடலாகிய ரீதியில்இந்தப் புதிய கூட்டணியில் இணைந்து பயணிக்கநிறைய அரசியல் பிரமுகர்கள்தமிழ் முஸ்லிம்சிவில் அமைப்புகள்தங்களுடன் கலந்துரையாடல்கள்தற்பொழுது நடைபெற்று வருகிறது என்று ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக்(அமீனி) தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :