முன்பள்ளியில் இருந்து முதலாம் தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களின் விடுகை விழாவும் புதிய முன்பள்ளி மாணவர்களினை வரவேற்க்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றியோ மார்கட்டிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் றிஸ்மீர் நைனா முஹம்மது அவர்களின் சார்பில் அந்நிறுவனத்தின் kiwi உற்பத்திப்பிரிவின் முகாமையாளர் றுமைஸ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
பாடசாலையின் பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ் , உதவி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ் , சாய்ந்தமருது பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.எஸ். சிறீன் , கல்முனை வடக்கு பிரதேச செயகல முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். ஆயிஷா , ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.ஐ.எம். முபாறக் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் இந்நிகழ்வுகளை முன்பள்ளி ஆசிரியைகளான எம்.சி. றிஸ்மியா மற்றும் எம். றுஹ்னா பேகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளுடன் அதிதிகளுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்ததக்கது.
0 comments :
Post a Comment