தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு கள பரிசோதனைஎம்.எம்.றம்ஸீன்-
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு மேற்பார்வை மற்றும் சிரமதான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம்.பஸால் அவர்களின் நேரடி கண்காணிப்புடன் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். தஸ்லிமா வசீர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் ஒரு வார காலத்திற்கு டெங்கு மேற்பார்வை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு கள உதவியாளர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :