நேற்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற கேப்டன் விஜயகாந்திற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை!



வி.ரி.சகாதேவராஜா-
றைந்த பிரபல நடிகரும் தமிழ் உணர்வாளருமான புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்திற்கு காரைதீவில் நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஆத்மசாந்தி பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவுக்கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் காரைதீவு பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது .

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம ஸபிரமுகராக கலந்து கொண்டார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் ஜி.சிறிநேசன் சி லோகேஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் மலர் மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏனைய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் இரண்டு நிமிடநேர மௌன அஞ்சலி நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக பிரமுகர்கள் கேப்டன் விஜயகாந்தின் வாழ்க்கை மற்றும் ஈழதேசிய போராட்டத்தில் பங்களிப்பு தொடர்பாக உரையாற்றினார்கள்.
தாயகமக்களின் கதாநாயகனும் ஈழ தேசத்தின் விடுதலைக்காக அளப்பெரிய சேவைகளை வழங்கிய கொடை வள்ளலுமான விஜயகாந்த் அவர்களுடைய ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் உணர்வாளருமாக கலந்து கொண்டனர்.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :