இலங்கை கணக்காளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கல்முனையன்ஸ் போரத்தின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் எஸ்.எல்.எம். நிப்றாஸ் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கணக்காளர் சேவை தரம்-lll இற்கு நேரடி ஆட்சேர்ப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரேயொரு முஸ்லிம் நபரான நிப்றாஸை கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர்கள் சனிக்கிழமை (27) வீடு தேடிச்சென்று பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவித்தனர்.
கல்முனையன்ஸ் போரட் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து செயற்படும் நிப்றாஸ் சமூக சிந்தனையுடன் பல்வேறு பொது நல வேலைத்திட்டங்களிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
ஒரு கணக்காளனாக நம் தேசத்திற்கும், நமது மண்ணுக்கும் சீரிய தொண்டாற்ற கல்முனையன்ஸ் போரம் வாழ்த்துகிறது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment