அம்பாறை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முடியும் வரை நுகர்வோர் சட்டத்தை மீறிய 1011 வர்த்தகர்களுக்கு எதிராக நியாயாதிக்கத்திற்குட்பட்ட நீதிமன்றங்களில் 68 இலட்சத்து 68 ஆயிரத்து 998 ரூபாய்கள் தண்டப்பணப்பணமாக செலுத்தப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தெரிவித்தார்.
அம்பாறை, தெஹியத்தக்கண்டிய, அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை ஆகிய பிதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோஸ்தர்கள் மேற்கொண்ட 1117 சுற்று வளைப்புகளின் போது இவ் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 1011 வழக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டிருந்ததாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment