உலகில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முறையான கல்வித்திட்டம் அவசியம் : பாடசாலை திறப்பு விழாவில் எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு.நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண சபை முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துறையப்பா நவரத்னராஜா அவர்களின் புதல்வியும், குருகுல இல்லத்தின் இஸ்தாபகரான கைலாசம்பில்லை ஐயா அவர்களின் பேத்தியுமான திருமதி நவரத்னராஜா தீபா அவர்களை முதல்வராக கொண்ட ஆலையடிவேம்பு ப்ளூசூம் முன்பள்ளி பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது

கிழக்கு மாகணசபை முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துறையப்பா நவரத்னராஜா அவர்களின் அழைப்பின் பெயரில் கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப்பாடசாலையை திறந்துவைத்தார்

பாடசாலையை திறந்து வைத்து இங்கு உரையாற்றிய கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், உலகில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள முறையான கல்வித்திட்டம் அவசியம். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்யும் வகையில் மாணவர்களின் அடித்தளம் பலமாக கட்டியமைக்கப்படல் வேண்டும் என்றார்.

மேலும் அம்முயற்சியினை பலவருட அனுபவம் கொண்ட ஆசிரியைகள் இங்கு காணப்படுவதனால் அதனை முறையாக கட்டியமைப்பார்கள் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துறையப்பா நவரத்னராஜா, கைலாசம்பிள்ளை ஐயா, முன்பள்ளி பாடசாலை பணியகத்தின் அதிகாரிகள், கல்விப் பணிமனை அதிகாரிகள் மற்றும் பெற்றோகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :