இளைஞர்கள் சரியான பாதையில் ஈடுபடுவதற்கான தொழில் வழிகாட்டல்" செயலமர்வு.



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் GAFSO ன் அனுசரணையில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் பிரதேசமட்ட இளைஞர் மன்றம் உருவாக்கப்பட்டு, மன்றத்தின் அங்கத்தவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு (26.01.2024) வெள்ளிக்கிழமை காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு இளைஞர் யுவதிகளுக்கு மிக முக்கியமானதாக அமைகின்ற "இளைஞர்கள் சரியான பாதையில் ஈடுபடுவதற்கான தொழில் வழிகாட்டல்" எனும் தலைப்பிலான மிகவும் காத்திரமானதான விரிவுரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் GAFSOன் நிகழ்ச்சி திட்டத்தின் பணிப்பாளர் ஏ. ஜே. காமில் இம்டாட் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், காரைதீவு பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :