பொங்கல் தமிழர்வாழ்வில் பொங்குமா? காரைதீவு பிரதேசசபைத முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்துச்செய்தி!



வி.ரி.சகாதேவராஜா-
யற்கையோடு இயைந்து இயற்கைக்கு உளப்பூர்வ நன்றி பாராட்டி- உழைப்பின் உன்னதத்தைப் போற்றுவது தமிழர் கொண்டாடும் தைப் பொங்கல் விழாவின் உன்னத நோக்கமாகும். அப்படிப்பட்ட புனித நாளில் தமிழர்வாழ்வில் நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வானது இந்தவருடப் பொங்கலுடனாவது எட்டப்படவேண்டும் என காரைதீவு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் கே.ஜெயசிறில் தனது பொங்கல் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இத்தரணியெங்கும் பொங்கவேண்டும்.
பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. 'நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே' என்பதை வேதம் கூறுகிறது.

அப்படிப்பட்ட சூரியபகவானுக்கு நன்றி கூறுகின்ற இந்நாளில் சகலரது வாழ்விலும் நன்றியுணர்வு ஏற்படவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :