மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு கள விஜயம்




அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மல்வத்தை பிரதேச வைத்தியசாலையில் சுமார் 1.5 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டதுடன் தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஒப்பந்தக்காரரையும் கலந்தாலோசனையும் செய்தனர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களும் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம் மாஹிர் அவர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் குறித்த கள விஜயத்தில் இணைந்து கொண்டதுடன் வேலைத்திட்டத்தை விரைவாக முடிவுறுத்தி அதனை பாவனைக்காக கையளிப்பது தொடர்பிலும் கலந்தாலோசித்தனர்

குறித்த நிகழ்வில் வைத்தியசாலையின் நீண்டநாள் தேவைாயாக இருந்த குளிரூட்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் ஞாபகார்த்தமாக மரமொன்றையும் பணிப்பாளர் நட்டு வைத்தார்

மல்வத்தை பிரதேச வைத்திய அதிகாரி அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய சாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :