புதிய வருடத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப் பட்ட மாபெரும் கிராமிய படகு ஒட்டப் போட்டி (6) கிண்ணியா பாலத்திற்கருகில் நடை பெற்றது.
இப் போட்டி பழைய இறங்கு துறையிலிருந்து ஆரம்பித்து சிறுவர் பூங்கா கடற்கரையில் முடிவடைந்தது.
இப்போட்டி இரு கட்டமாக இடம் பெற்றதோடு,முதற் கட்ட 15 அடி கொண்ட படகு ஒட்டப் போட்டியில் இன்சார்,மரைக்கார் முதலாமிடத்தை யும்,பி.நௌசாத்,ரீ.தௌபீக் இரண்டாமிடத்தையும்,நளீர் ,நஜீப் மூன்றாமிடத்தையும் ,இரண்டாம் கட்டம் 18 அடி கொண்ட படகு ஒட்ட போட்டியில் ஏ.பைரூஸ்,எஸ்.நப்ரிஸ் முதலாமிடத்தையும், இமாம்தீன், ஹிஸ்புல்லாஇரண்டாமிடத்தையும்,எப்.பர்சாத்,என்.எம்.நப்ரான் ஆகியோர் இரு கட்ட போட்டிகளில் இருவர் வீதம் இணைந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப் பட்டன.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாவும்,இரண்டாம் பரிசாக ஜம்பதாயிரம் ரூபாவும்,மூன்றாவது பரிசாக இருபத்தைந்தாயிரம் ரூபாவும் வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது
இந் நிகழ்வில் இருபத்தைந்தாயிரம் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கௌரவ டாக்டர் வெங்கடேஸ்வரன் பிரதம அதிதியாகவும்,நடிகர் நந்தா,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் பிரதியமைச்சர்களுமான எம்.எஸ்.தௌபீக்,கபில நுவன் அத்துக்கோரல,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ..எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ,கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவன்னன், திருகோணமலைமாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பார்த்தீபன், செயலாளர்கள் , திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்
0 comments :
Post a Comment