Arafa Premier League சுற்றுத் தொடருக்கான 21 அணிகளுக்கான அங்கி அறிமுக விழா!



அபு அலா -
ம்பாறை - அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் நடாத்தும் Arafa Premier League சுற்றுத் தொடரில் பங்கேற்கும் 21 அணிகளுக்கான அங்கி அறிமுக விழா (29) அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி மண்டபத்தில் இடம்பெற்றது.

தொழிலதிபர் ஏ.சி.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் சாபீர், பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய முன்னாள் அதிபரும் காதி நீதிமன்ற நீதிபதி ஏ.சி.சைபுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவரும் முன்னாள் உதவி தவிசாளருமாகிய எஸ்.எம்.சபீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 21 அணகளுக்குரிய அங்கிகளை வழங்கி வைத்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :