கிண்ணியா பிரதேச பல்துறை கலைஞர்களின் வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு
எம்.ஏ.முகமட்-
ல்துறை கலைஞர்களின் வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (31) இடம் பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் கலாசார அதிகார சபையின் தலைவரும் கிண்ணியா பிரதேச செயலாளருமான எம்.எச்.முகம்மது கனி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்கள் வரவேற்புரையையும் தவைமையுரையையும் நிகழ்த்தினார்,

இஸ்லாமிய கீதம்,பாடல்,கவிதை,நகைச்சுவை செய்திகள்,ஸ்டேடட் காமடி,இசையுடன் பாடல்,தற்காப்பு கலையான சீனடி,பாடல் நயம் மற்றும் கலையின் முக்கியத்துவ உரை ஆகிய நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் கலாசார அதிகார சபையின் தலைவரும் கிண்ணியா பிரதேச செயலாளருமான எம்.எச்.முகம்மது கனி அவர்கள், அதன் ,நிர்வாக உத்தியோகத்தர்.கே.எம்.நிசௌஸ்,கலாசார அதிகார சபையின் ஒருங்கிணைப்பாளரும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜே.எம்..ஹில்மி,அதன் செயலாளர் எம்.ரீ .சஜாத்,உப செயலாளர் எம்.ஏ.முகமட்,உப தலைவரும் கவிஞருமான அ.கௌரிதாசன்,ஆலோசகரும் ஓய்வு நிலை அதிபருமான ஏம்.ஏ.அக்பர் சலீம்,பொருளாளர் எம்.எம்.எம்.தௌபீக் ஆசிரியர்,சீனடிச் சங்கஉறுப்பினர்கள், பாடகர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கிண்ணியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி அவர்கள் இறுதியாக நன்றியுரையாற்றினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :