அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரியின் உயர்தர வர்த்தக மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த "வர்த்தக தினம்" மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் எம்.ஏ.ஏ.டீ.எஸ்.டீ.குலரெட்ண தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்வியாளர்கள்,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வருடத்தில் உயர்தர வர்த்தக துறையில் பாடவிதான மற்றும் புறப்பாடவிதானத்தில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
0 comments :
Post a Comment