மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினரினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் அரச திணைக்களங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்றது.
இன்று காலை முதற்கட்டமாக ஏறாவூர் பகுதியில் டெங்கு நோய் தொடர்பான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஏறாவூர்
சுகாதார வைத்திய அதிகாரி Dr. FSM.Wasim மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் MHM.Faleel பொதுச் சுகாதார பரிசோதகர் MIM. Fashmi
இணைந்து இன்று காலை இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று காலை ஏறாவூர் - இலங்கை தொலைத்தொடர்பு நிலைய வளாகம், ஏறாவூர் - இ.போ.ச வளாகம் ஆகிய இடங்கள் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அங்கு டெங்கு நோய் - பரவும் அபாய குடம்பிகளும் இனங்கானப்பட்டதைத்தொடர்ந்து குறித்த பகுதியை துப்பரவு செய்யப்பட்டவேண்டியதன் அவசியம் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment