பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியில் க.பொ.த.உயர்தர கணித, விஞ்ஞான ,தொழில்நுட்ப மாணவர்களுக்கு கிழக்கு பிராந்திய சத்தியசாயி சர்வதேச நிறுவனத்தால்
மனிதவள மேம்பாட்டு செயலமர்வு கடந்த திங்கட் கிழமை (4) இடம்பெற்றது.
நிறுவனத்தின் இணைப்பாளர் செல்வி கே.கமலாதேவி (கல்விப்பிரிவு )
தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய தலைவர் ஏ.டீ.கஜன்குமார், த.தேவானந்தம், சுபா சக்கரவர்த்தி
(மேனாள் வலயக்கல்விப்பணிப்பாளர் அருள்நந்தி தவமணிதேவி,
ஜெகநாதன் ரதிதேவி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய செயலாளர் பீ.விஜயகுமார் , முன்னாள் இணைப்புக்குழு தலைவர் ஜெகநாதன் ,பாடசாலை அதிபர் தி.பார்த்தீபன் உட்பட
பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்
0 comments :
Post a Comment