சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்பூட்டும் "வன்முறையற்ற சமூகம்; மகிழ்ச்சியான உலகு" வீதி நாடகம்நூருல் ஹுதா உமர்-
ண்மைக்காலமாக பிரதேச செயலகங்களின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவிற்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள், வீட்டு வன்முறை, குடும்ப பிரச்சினைகள் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பாக அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இவற்றைக் கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் விழிப்புணர்வுகளை அதிகரிக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

அந்தவகையில், "வன்முறையற்ற சமூகம்; மகிழ்ச்சியான உலகு" எனும் கருப்பொருளின் கீழ் வீதி நாடகம் மாணவ மற்றும் சமூக பங்கேற்புடன், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் கிராமங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது.

இவ்வீதி நாடகமானது, இறக்காமம் கமு/சது/ அஷ்ரப் தேசிய பாடசாலை, இறக்காமம் கமு/சது/ அல் அமீன் மகா வித்தியாலயம், இறக்காமம் கமு/சது/ அஸ்-ஸபா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதன் கிழமை சிறப்பாக நடைபெற்றது.

2023.12. 09 ஆம் திகதி சனிக்கிழமை இறக்காமம் - 02, வரிப்பத்தான்சேனை 02, 03, ஆகிய பிரதேசங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவும், இஸ்லாமிக் ரிலீப் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்வினை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :