அஸ்ஹர் இப்றாஹிம்-
பாடசாலை வகுப்பறைகளை மாணவர்களுக்கு உகந்த கற்றல்- கற்பித்தல் சூழலை உயிரோட்டம் உள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றி அமைப்பதற்கு பாடசாலையில் முன்னெடுக்கப்படுகின்ற பகுதி வாரியான வகுப்பறை மட்ட போட்டி நிகழ்ச்சிகளின் ஒரு கட்டமாக தரம் 11 மாணவர்களின் வகுப்பறை மட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வானது கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபீர் அவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தரம் 11 இன் பகுதி தலைவர்களான ரீ.கே.எம். சாக்கீர் மற்றும் ஏ.எம். அப்றாஜ் றிழா ஆகியோரது வழிகாட்டுதலுடன் தமது பிரிவின் அனைத்து வகுப்பறைகளிலும் உள்ளக மற்றும் வெளிச்சூழல்களை வகுப்பு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனும், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரதும் பூரண ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கல்முனை முஸ்லிம் பிரிவின் கோட்டக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.றியாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு,கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஆகியோர் வகுப்பறைப் போட்டிகளின் புள்ளி கணிப்பீடுகளுக்கான நடுவர்களாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment