சம்மாந்துறையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது! ஐ.எல்.எம் நாஸிம்-
நேற்று சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட போதை ஒழிப்பு சுற்றி வளைப்பின் போது 6640 மில்லி கிராம் ஐஸ், ஐஸ்,260 போதை தரும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன .அத்தோடு சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்வம் குறித்து சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்ததாவது....

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (19)பொலிஸ் திணைக்களத்தின் விசேட செயற்திட்டத்திற்கு அமைவாக சம்மாந்துறை பொலிஸாரினால் தென்கிழக்கு பல்கல்கழைக்கத்தின் சம்மாந்துறையில் உள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தை அன்டிய பகுதியில் சம்மாந்துறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது

போதை விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சம்மாந்துறை பெறுங்குற்றவியல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே சதீஸ்கரன் தெரிவித்தார்.

இவரை கைது செய்த போது இவரிடம் 6600 மில்லி கிராம் ஐஸ் ,260 போதை தரும் மாத்திரைகள் அத்தோடு இன்னும் ஒருவரிடம் 40மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :