இலங்கை சுங்கத் திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள அலுவலகத்திற்கு இலங்கை மாணிக்கல் வர்த்தக சங்கம் 15 இலட்சம் பெறுமதி வாய்ந்த இரும்பு பெட்டகம் பாதுகாப்பு அலுமாறி ஒன்றை அன்பளிப்பு செய்தனர்.
கடந்த காலங்களில் சர்வதேச , நாடுகளுக்கு ஏற்றுமதி ,இறக்குமதி வர்த்தக சம்பந்தமான மாணிக்கல் நகைகள் கண்காட்சிக்குரிய மாணிக்க கற்களை பாதுகாப்பாக விமான நிலையத்தில் வைப்பதற்காக பாதுகாப்பு இரும்பு அலுமாறி பற்றாக் குறை காணப்பட்டது. இதனை நிவர்த்திசெய்யு முகமாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்ப்பாளர் நாயகம், பி.பி.எஸ்.சி நோனிஸ், விசேட திட்ட பணிப்பாளர் கே.டி.சி சுமாநந்தாச ஆகியோர் மாணிக்கல் வர்த்தக சங்கதினரும் நடாந்திய கலந்துரையாடலை அடுத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கலாநிதி முஸ்லிம் சலாஹுதீன் தெரிவிததார்.
இதனை வழங்கு முகமாக சுங்கத்தினைக்களத்தின் பணிப்பாளர் ஜானக்க லியனகேயிடம் இலங்கை மாணிக்கல் கல் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி முஸ்லிம் சலாஹூதீன், மற்றும் செயற்குழு உறுப்பிணர்களும் சுங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
மாணிக்கல் வர்த்தக சங்கத்தின் தலைவர் கலாநிதி முஸ்லிம் சலாஹுதீன் மற்றும் செயற்குழு உறுப்பிணர்களான பின்சிரி விஜயபால, றஸ்னி ஹனிபா, ஜெஸ்மின் மனசூர், நவ்ருஸ் அஸ்மி ,அஜ்வர்டீன், விமான நிலைய சுங்க அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment