சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம்



ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்-மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை

நேர்காணல்-ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்

ட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான பெண் தனது பிள்ளைகளின் மத்ரஸா கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறுகின்றார்.

இந்நிலையில் மௌலவியை சந்தித்து அப்பெண் உதவி கோருகின்றார்.இந்நிலையில் மௌலவி அப்பெண்ணிற்கு குறித்த மத்ரஸாவில் மாணவர்களை கண்கானிப்பதற்கான பதவி ஒன்றிறை வழங்கியதாக தனது வாக்குமூலத்தில் அப்பெண் உறுதிப்படுத்துகின்றார்.

இந் நிலையில் சம்­பவ தின­த்­த­ன்று என்ன நடந்­தது என அம் மத்­ர­சாவில் கட­மை­யாற்­றிய கண்காணிப்பாளரான பெண்மணி 9வயது-34) என்பவரை சந்­தித்து உரை­யா­டினேன். அவ­ரது வாக்கு­­மூ­லத்தை அவ்­வாறே தரு­கி­ன்றேன்.

நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்­த போது மரணித்த மாணவனான முஸ்­அப்பை கண்டேன். சாப்பிட்டுவிட்டு வந்து கொண்­டி­ருந்­­தார்

பின்னர் நான்க­ரை மணியளவில் மத்­­ர­சா­வி­லி­ருந்து வீட்­டுக்கு வந்து மீண்டும் 6.30 மணி­ய­ளவில் மத்ரசாவுக்கு சென்றேன். அப்போது இந்த சம்பவம் நடந்­து முடிந்திருக்க வேண்டும்.

நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன். அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான சானாஸ் மௌலவி ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளி­வாக கேட்­ட­து.

அப்போது நான் ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க’ என கேட்டேன். அதற்கு அவர் யாரை அடித்­துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை.பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான். அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள். என்ன சுனாமியா வந்­து­விட்­டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்­குள் நினைத்துக் கொண்­டேன்.

அதன் பிறகு மற்­றொரு மாண­வர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் சுவிட்சை ஓப் பண்ணினார். பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை.

அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார். பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி.கமராவின் வயர்களை கழற்றினார்கள். நான் அத்தோடு அங்கு ஓரி­டத்தில் அமர்ந்­துவிட்டேன். கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள். பின்னர் பிள்­ளை­க­ளி­டம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்­கி­ருந்து சென்றுவிட்­டார்.

ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் மர­ணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன். அப்போதுதான் முஸ்அப் என்று சொன்னார்கள். கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்­சியில் உறைந்து போனேன். நான் பகல் தானே முஸ்அப்பை கண்டேன் என்று கூறி அழுதேன்’’ என்­றார்.

இச் சம்­பவம் தற்­கொ­லைதான் என கதை பரப்பி குறித்த மெள­லவி தப்­பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூ­பிப்­ப­தற்குத் தேவை­யான ஆதா­ரங்­களும் சாட்­சியங்­­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் பொலிசார் தெரி­விக்­கின்­ற­னர்.

முஸ்லிம் சமூ­கத்தை பேர­திர்ச்­சிக்­குள்­ளாக்­கிய இச் சம்­பவம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட மெள­லவி கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் இச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அம்­பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் வழி­காட்­டலில் சாய்ந்­த­ம­ரு­­து பொலி­சார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :