கல்வி அமைச்சு நடாத்திய சர்வதேச ஒலிம்பியாட் கணித போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த மல்வத்தை மாணவி ஜினோதிகா, மீண்டும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தேசிய ரீதியில் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய மாணவி செல்வி சிவரூபன் ஜினோதிகா ஏலவே கணித ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று மகத்தான சாதனை படைத்தமை தெரிந்ததே.
இது சம்மாந்துறை வலயத்தில் சர்வதேச ஓலிம்பியாட் சரித்திரத்தில் முதல் சாதனையாகும்.
இப்போது விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி ரொப்10 முதல் பத்து சாதனையாளர்களுள் ஏழாவது இடத்தில் வந்துள்ளார்.
இதன் மூலம் இவர் சர்வதேச பயிற்சிக்கு தெரிவாகியுள்ளார்.
கணிதம் மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தில் தெரிவான முதனிலை மாணவியாக செல்வி ஜினோதிகா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
அதுவும் ஒரு பின்தங்கிய பிரதேசத்தில் ஏழ்மையான குடும்ப சூழலில் இத் தேசிய சாதனை படைத்தது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
சாதனை மாணவியின் தாயார் திருமதி பிரபாஜினி சிவரூபன் கூறுகையில்.. எனது மகளின் இச்சாதனைக்கு உரமூட்டிய அனைவருக்கும் நன்றிகள். குறிப்பாக விசேடமாக பயிற்சியளித்து உதவிசெய்த ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியர்களான திரு திருமதி வசந்தினி நடராசன் ஆகியோருக்கும் நன்றிகள். என்றார்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment