கிண்ணியாவில் கிழக்கு மாகாண மீலாதுன் நபி விழா



எம்.ஏ.முகமட்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கிண்ணியா பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய மாகாண மீலாதுன் நபி விழா கிண்ணியா இக்ரா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் (15) நடை பெற்றது.

இந் நிகழ்வில் வரவேற்பும் தலைமையுரையையும் மாகாண பணிப்பாளர் எஸ்.நவநீதன் நிகழ்த்தினார்.கிண்ணியா அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு கஸீதா இடம் பெற்றது.இதனையடுத்து கிழக்கு மாகாண கல்வியமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் உரையாற்றினார்.

அல் அஹ்லா வித்தியாலய மாணவர்களின் (களிகம்பு) கோலடி ஆட்டம் இடம் பெற்றது.தம்பலகமம் ஜலீல் பாவாவின் இஸ்லாமிய கீத பாடலும்,கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் ஆரிப் மௌலவியின் மீலாத் விசேட உரையும், அ.கௌரிதாசனின் அண்ணலாரின் அழகிய முன்மாதிரி என்ற கவிதையும், பி.நக்கீஸின் இஸ்லாமிய கீதமும்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்களின் உரையும்,கலாபூசணம் பி.ரி.அஸீஸின் வள்ளலார் நபிகள் என்ற கவிதையும்,அல் மத்ரஸதுல் காதரியா பாத்திமா இஸ்மா குழுவின் கஸீதாவும் இடம் பெற்றன.

மீலாத் சிறப்பு மலர் நயவுரையை திருகோணமலை ஸஹிரா கல்லூரி ஆசிரியர் எச்.எம்.எம்.மன்சூர் நிகழ்த்தினார்.

மீலாத் சிறப்பு மலர் முதல் வெளியீட்டை தென் கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறை பேராசிரியர் ஏ.எப்.எம்.அஸ்ரப் அவர்களுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் வழங்கி வைத்தார்.
மீலாத் விழாவையொட்டி நடத்தப் பட்ட கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்.எஸ் நவநீதன் மற்றும் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.நளீம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக் கழக மொழித் துறை பேராசிரியர் ஏ.எப்.எம்.அஸ்ரப் பிரதம அதிதியாகவும்,கிண்ணியா பிரதேச செயலாளர்.எம்.எச் முகம்மது கனி,மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.நளீம் ஆகியோர் சிறப்பு அதிதியாகவும்,கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் ஆரிப் மௌலவி விசேட அதியாகவும், கவிஞர்கள்,ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள்,துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் இறுதியாக கிண்ணியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.அன்பழகன் நன்றியுரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :