முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் நியூஸ் நவ் (news now) நிறுவனமும் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கேகாலை மாவட்ட பள்ளி வாசல்களில் கடமை புரியும் உலமாக்களுக்கான ஊடக செயலமர்வொன்று அரநாயக்க வில்பொல அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
"ஊடகமும் தொடர்பாடலும் "எனும் தொனிப் பொருளில் இரு நாட்களாக நடைபெற்ற இப் பயிற்சி செயலமர்வில் வளவாளர்களோடு,வில்பொல ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இஸட். ஏ.எம். பைஸல் அவர்கள் சிறப்பதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment