உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு ஏறாவூர் ஜயங்கேணி பஷீர் சேகுதாவூத் பொது நூலகத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வானது இன்று நூலகப் பொறுப்பாளர் திரு வே. நளீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் செயலாளர் V. பற்குணன் மற்றும் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் M.H.M. ஹமீம் ஆகியோர்களும்,கௌரவ அதிதிகளாக முன்னாள் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் M.S.M. ஜஃபர், சனச் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோதினி சிவமலர், நூலக நெறிப்படுத்தல் ஹிதாயா சந்திரகுமார் நழிந்திரன் முகைதீன் பஹார் இவர்களோடு பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சிவமலர் றிப்னாஸ் வாசிப்பு போட்டி வர்ணம் தீட்டுதல் போட்டி கதை போட்டிக்கான சான்றுதல்களும் பரிசுல்களும் வழங்கப்பட்டது
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் V.பற்குணன் ஜனாதிபதியால் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அது நடந்தால் எங்களுடைய ஏறாவூர் பிரதேச சபைக்கு வருமானம் மென்மேலும் மேற்கொள்ளும். எமது நாட்டுக்கு நல்ல வேலையை செய்து வருகின்றபோது எமது பிரதேசங்களும் மிக அபிவிருத்தி காணக்கூடிய பிரதேசமாக மாறும் சந்தர்ப்பம் இருக்கின்றன தேர்தலில் மிகக் குழப்பமான நிலையில் காணப்படுகின்றன நமது பிரதேச மக்களுக்கான அபிவிருத்திகளை வருகின்றவர்கள் அபிவிருத்தி செய்ய வேண்டிக் கொள்கின்றேன்.
2004ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத்தினால் தேசிய ஆவணங்களுக்கான முதல் நிகழ்வு இலங்கை அரசாங்கத்தினால்2004 வெளியிடப்பட்டது அதற்கு அமைவாக இலங்கையில் உள்ள நூலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறன
வருடம் தோறும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நாங்கள் வாசிய சாலைக்கு இன்னும் மென்மேலும் பண உதவிகளை நாங்கள் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment