காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையின் முப்பெரும் விழாஅஸ்ஹர் இப்றாஹிம்-
காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையின் முப்பெரும் விழா காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் 95 ஆண்டு நிறைவு விழா ,பரிசளிப்பு விழா ,ஆசிரியர் கௌரவிப்பு விழா என்பன இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் திருமதி ஜெசீமா முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம் .எல் .ஏ.ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர் காத்தான்குடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ. ஜே. எம் ஹக்கீம் காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிஸ்கா ஷபீன் அஷ்ஷெய்ஹ் மும்தாஸ் மதனி உட்பட கல்வி அதிகாரிகள் பிரமுகர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது பிரதம விருந்தினர் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம் .எல் .ஏ.ஹிஸ்புல்லாஹ்
பாடசாலை அதிபர் திருமதி ஜெசிமா முஸம்மில் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததுடன் கௌரா விருந்தினர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

அதே போன்று பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர்

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது இடம்பெற்றன.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :