தெல்தோட்டை ஊடக மன்றமும் .அருள்வாக்கி அப்துல் காதர் கலை இலக்கிய மன்றமும் இணைந்து அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் 200 வருடங்கள் நினைவுப் பேருரையும் , கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிஞர்களுக்கு விருது வழங்கி கொளரவிக்கும் நிகழ்வு கொழும்பு வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் 30.11.2023 நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரிப்புத்தீன் தலைமை வகித்தார், நினைவுப் . பேருரையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்.எழுத்தாளர் ,பன்னுலாசிரியர் மயில்வாகனம் திலகராஜா, நிகழ்த்தினார்.
இந் நிகழ்வின் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், அப்துல் ஹலீம், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர்களும் கலந்து கொண்டு கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
வரவேற்புரையை தலைவர் தெல்தோட்டை ஊடக மன்றம் அஷ்ஷெக் சி.எம்.எம்.ஸூபைர், பேருரையாளர் அறிமுகத்தினை அஷ்ஷேக் ஏ.எம். மிஹ்ழார் உப அதிபர் கொழும்பு சாஹிராக் கல்லுாாி, மற்றும் கவிஞர்கள் பாராட்டு நிகழ்வினை கண்டி வலய ஆசிரிய ஆலோசகர் ஜ.எம்.ஜெமில் நிகழ்த்தினார், அத்துடன் தேசிய கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர் டி.என்.இஸ்ரா, ஏற்புரையை நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment