மருந்துப் பொருள் மோசடிக்கு சுகாதார அமைச்சர் மட்டுமல்ல,அவரைப் பாதுகாக்க கைதூக்கிய 113 பேரும் பொறுப்புக் கூற வேண்டும்.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் உள்ளிட்ட மருந்துத் துறையில் சமீபத்தில் நடந்த திருட்டு,ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும்,இது தொடர்பாக முதலில் குரல் எழுப்பியது ஐக்கிய மக்கள் சக்தியே என்றும்,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் இளம் உறுப்பினர்களில் ஒருவரான வைத்தியர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்பினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, 113 பேர் ஆதரவாக வாக்களித்து சுகாதார அமைச்சரைப் பாதுகாத்த போது, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 பேர் எதிராக வாக்களித்தனர் என்றும்,இந்த ஊழல் மோசடிகள் அனைத்திற்கும் அப்போதைய சுகாதார அமைச்சர் மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் அவரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்த 113 பேரும் பொறுப்பாளிகள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சார்பாக இருந்து அவருக்கு ஆதரவாக முன்நின்றவர்கள் யார் யார் என்பதை தேடிப் பார்க்குமாறு 220 இலட்சம் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பதாகவும்,இந்த போலி மருந்து மோசடியில் இந்த 113 பேரும் ஈடுபட்டதாகவும்,இதற்கு இவர்கள் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 58 ஆவது கட்டமாக அநுராதபுரம் கலாவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

🟩திருட்டு மோசடிகளை மேற்கொள்ள சட்டங்களைக் கூட மாற்றிய அரசங்கம்
இது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதாக கூறிக் கொண்டு, கொள்முதல் முறைகளைத் தவிர்த்து,அதே ஒப்பந்தங்களை தனது நட்பு வட்டார நண்பர்களுக்கு வழங்கும் சட்டங்களை தற்போதைய அரசாங்கமே நிறைவேற்றியுள்ளதாகவும்,வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டிலும் கூட மோசடிகளும் திருட்டுகளும் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

🟩திருட்டு,மோசடிகளாலயே அன்னிய நேரடி முதலீடு நாட்டுக்கு கிடைக்காமைக்கு பிரதான காரணமாகும்.

உண்மையான தலைவர்கள் என்றால், உண்மையிலேயே திறமையானவர்களாக இருந்தால்,அன்னிய நேரடி முதலீட்டுக்களால் வளப்படுத்திக் கொள்ளும் இயலுமை பெற்றிருக்க வேண்டும் என்றும்,நாட்டில் நடக்கும் திருட்டு,

மோசடி,ஊழல்,அரசியல் சந்தர்ப்பவாதங்களால் தான் அன்னிய நேரடி முதலீடு வருவதில்லை என்றும்,மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்த பின்னர், தமக்கு சாதகமாக சுய ஆதாயம் தேடும் நோக்கில் தவளைகள் போன்று பக்கம் மாறும் சந்தர்ப்பவாத கூத்தும் நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் கூட இதுவே நடந்ததாகவும்,இந்தளவு சீரழிந்த அரசியல் கலாச்சாரமே நாட்டில் உள்ளதாகவும்,நாம் எந்த அரசியல் கருத்தை கொண்டிருந்தாலும் ஒழுக்கமாகவும் நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 58 அரச பாடசாலைகளுக்கு 551 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :