மூதூர் லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணிகள் வழங்கும் நிகழ்வு.


நூருல் ஹுதா உமர்-

தி
ருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்தில் உள்ள கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதி கஸ்ட குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தாமோதரம்பிள்ளை சதீஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.

இப் பாடசாலையானது 1985 உள்நாட்டு கலவர காலப்பகுதி அதனைத்தொடர்ந்து யுத்த காலப்பகுதியிலும் பாதிப்புக்கு உள்ளான பாடசாலையாகும். தற்போழுதும் இவ் மண்டபத்தின் மேல் தோற்றமானது சிதைவடைந்து மழை காலங்களில் மழைநீர் வடிகின்றது. 

இக் காலங்களில் மாணவர்களின் எந்த ஒரு நிகழ்வுகளும், பாடசாலையில் எனைய நிகழ்வுகளை நடாத்துவதற்கும் முடியாதுள்ளது. மேலும் எமது பாடசாலையில் கல்வி செயற்ப்பாட்டினை எடுத்துக்கொண்டால் சாதாரண தரத்திற்கு விஞ்ஞானம் மற்றும் கணித பாடத்திற்கான ஆசிரியர்கள் இது வரையும் இல்லாமல் காணப்படுகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் பிரத்தியோக ஆரியர்களைக் கொண்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

சென்ற 2022 இல் சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலையில் இருந்து 11 மாணவர்கள் தொற்றி இருந்தனர் 11 மாணவர்களும் விஞ்ஞான பாடத்தில் 100'/' சித்தியினையும் கணித பாடத்தில் 9 மாணவர்கள் A தர சித்தினையும் பெற்று முதூர் கல்வி வலயத்தில் முதற்தர பாடசாலையாக இப் பாடசாலை காணப்படுகின்றது. எனவும் அதிபர் இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜருபன், சி.காந்தன், ஆகியயோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை என்பனவற்றை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மூதூர் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். முசம்மில், ஆசிரிய ஆலோசகர் என்.எம். கலிலூர்ரகுமான், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :