மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

2023 ஆம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி, மூன்று மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

எம்.ஜே.எப்.செயினப் பிக்ரா 149,ஏ.ஆர்.றீமாஸ் ஹானி 147, எம்.எம்.எப்.ஸீனத் மனால் 146 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களையும்,கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஸி.என்.றிப்கா அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிபர் பிரதி அதிபர்களுடன் இனணந்து தரம் ஐந்திற்கு பொறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அதன் பகுதித்தலைவி எம்.எச்.யு.ரொஸானா, , வகுப்பு ஆசிரியர் ஏ.ஆர்.எம்.சுஜாஜா, , பிரத்தியேக ஆசிரியர் முஹம்மட் நசிருதீன் , பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் தன்ஸீல் , மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :