உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனையும், கண்காட்சியும்



வி.ரி. சகாதேவராஜா-
ண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வானது நேற்று
(27.11.2023) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.

இது சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வின் போது பிரதேச செயலக பிரிவின் உள்ளூர் உற்பத்தியாளர்களால் செய்யப்பட்ட பொருட்கள் (தைத்த ஆடைகள், உள்ளூர் மரக்கறிகள், உணவு வகைகள், மரக்கன்றுகள், பாதணிகள், கைப்பணிப்பொருட்கள், மரத்தினாலான கைவினை பொருட்கள், பனையோலை பொருட்கள், கைத்தறி) காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், கணக்காளர் ரி. விக்னராஜா, நிருவாக உத்தியோகத்தர் வே. தவேந்திரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :