பூநொச்சிமுனை காத்தான்குடி நகருக்கு வடபுறத்தே ஒன்றித்த கடலோர ஊராகும். வரலாற்று நூல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரேபியர்கள் வருகை தந்த முதல் தளமெனும் வரலாற்று தொண்மை மிக்க பிரதேசமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைக்கு அடுத்தபடியாக ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 50க்கும் மேற்பட்ட பல நாள் மீன்பிடிக்கலன்களை கொண்டு மீன்பிடியில் ஈடுபடும் துறைமுகத்தைக் கொண்ட பிரதேசமாகும்.
அதேவேளை கிழக்கில் தற்போது வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இப் பூநொச்சிமுனை பிரதேசம் முக்கிய தளமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களால் மேற்கொள்ளப்படும் EAST LINE எனும் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் பிரதான இடங்களில் ஒன்றாகவும் இவ்வூர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டில் துரிதகதியில் மேம்பட்டு வரும் சுற்றுலா துறை மேம்பாட்டில் எதிர்காலத்தில் இப்பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
இந்நிலையில் கடந்த 2004 ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் அழிவடைந்த இப்பிரதேச வீதிகள் எதுவும் இதுவரை காலமும் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கவில்லை. சுனாமியின் பின்னர் சுனாமி பாதிப்பு பிரதேச மீழ் கட்டுமானத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட TAARP, NECCDEP போன்ற பாரிய மீழ் கட்டுமான திட்டங்களிலும் இப்பிரதேசம் உள்ளடக்கப்படாது புறக்கணிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கிராமத்து வீதிகளின் தற்போதைய பரிதாபகர நிலையினை பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான அல்ஹாஜ் HMM. முஸ்தபா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் விரைவாக செயல்பட்ட அவர்கள் இவ்விடயத்தினை அதிமேதகுத ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வீதிகளை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தார்கள்.
அதன் அடிப்படையில் இவ்வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான மதிப்பீட்டுப் பணிகளை இன்று (27.11.2023) மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியளாளர் அவர்களின் பணிப்பின் பேரில் அவரது பணிக்குழாத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வீதிகளின் அபிவிருத்தி பணிகள் மிக விரைவில் நடந்தேற அழ்ழாஹ்வை பிரார்த்திப்பதுடன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அரசியல் செயற்பாட்டாளர் அல்ஹாஜ் HMM. முஸ்தபா அவர்களுக்கும் இப்பிரதேச மக்கள் தமது நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.
காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட உள்ள வீதிகளின் விபரம். 1. பூநொச்சிமுனை துறைமுக கடலோர வீதி 1.2Km. 2. பூநொச்சிமுனை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதி 1.2Km 3. ஏஹியா கடற்கரை வீதி 0.5 Km
MY.ஆதம் லெவ்வை
செயலாளர்
அல் பரகத் கிராமிய மீனவர் அமைப்பு
பூநொச்சிமுனை










0 comments :
Post a Comment