எம்.ஏ.ஏ.அக்தர்-
சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திற்கு றிஸ்லி முஸ்தபா கல்வி உதவி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஊடாக அதன் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்களினால் பல்லூடக கருவி (Multi Media Projector) வழங்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த பல்லூடக வகுப்பறைக்காக ஒரு ஸ்மார்ட் டிவியும், ஒரு மடிக்கணணியும் இந்த அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் முஹம்மட் சைபுதீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் .எம் இஸ்மாயில் , அமைப்பின் செயலாளர் திடீர் மரண விசாரணையாளர் அல் - ஜவாஹிர் மற்றும் பாடசாலை பிரதி அதிபர் ,உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment