அண்மையில் உயிரிழந்த குருநாகல் மாணவிக்கு உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி



அஸ்ஹர் இப்றாஹிம்-

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு  வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 " ஏ " பெறுபேறுகள் கிடைத்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.

அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளைப் பெற்று முதலிடம் வகிக்கின்றார். 

இதேவேளை இவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம்,கல்லீரல்,கண்,சிறுநீரகம் மற்றும் நுரையீரல் என்பன ஏழு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இன்றுவரை அவர்கள் உயிர் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :