ஹரீஸ் எம்பியின் ஏற்பாட்டில் மு.கா தலைவர் ஹக்கீம் கலந்து கொண்ட தலைவர் அஸ்ரப் நினைவு தின கலந்துரையாடல்




நூருல் ஹுதா உமர்-
முன்னாள் அமைச்சரும், மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் 23 வது நினைவு தினம் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி சாய்ந்தமருதில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. அது தொடர்பாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களினதும் மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் அம்பாறை மாவட்டம் பூராக நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கல்முனையில் இது சம்பந்தமான கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் தலைமையில் கல்முனை காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டமானி ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். சி எம் பைசல் காசிம், முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :