யாழ்ப்பாணத்தில் 'இனிய நந்தவனம்' இலங்கைச் சிறப்பிதழ் அறிமுக நிகழ்வு.



மிழ்நாட்டின் திருச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் 'இனிய நந்தவனம்' இதழானது வெள்ளி விழா கண்ட தமிழ் இதழாகும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்கெல்லாம் அனுப்பப்படும் இந்த இதழானது நாடுகள், பிரதேசங்கள், ஊர்கள், முக்கிய தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அநேக சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.

முன்னே யாழ்ப்பாணச் சிறப்பிதழை வெளியீடு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இலங்கைச் சிறப்பிதழ் வெளியாகி இருக்கின்றது. இலங்கைச் சிறப்பிதழின் யாழ்ப்பாண அறிமுக நிகழ்வானது 'இனிய நந்தவனம்' இதழின் இலங்கை தொடர்பாளர் எழுத்தாளர் யாழ். பாவாணன் தலைமையில் 19.08. 2023 சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் பொதுசன நூலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வில் பிரதம பங்கேற்பாளராக 'இனிய நந்தவனம்' இதழின் ஆசிரியர் த.சந்திரசேகரன் பங்கேற்றார்.

நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் மாதகல் மயூரன் தொகுத்து வழங்கினார். தமிழ் மொழி வாழ்த்தினை யாழ்.மாதகல் சென் யோசேப்பு மகா வித்தியாலய மாணவர்கள் இசைத்தனர். வரவேற்புரையினை யோ.புரட்சி வழங்கினார்.

வாழ்த்துரையினை இலக்கிய விருது பெற்ற படைப்பாளர் ஓய்வு நிலை அதிபர் ஆ.கனகரத்தினம் வழங்கினார். இலங்கை இதழின் அறிமுக உரையினை எழுத்தாளர் லதா கந்தையா நிகழ்த்தினார். 'செத்த வீடு' சிறுகதை உள்ளிட்ட அனைத்து கதைகளின் பட்டியலை வழங்கிய லதா தந்தையா இதழில் இடம் பெற்றுள்ள படைப்புகளை குறித்து விளக்கங்களையும் அளித்தார்.


இதழ் பற்றிய மதிப்பீட்டு உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்(சிறப்பு) பட்டதாரி டயானா நியூட்டன் நிகழ்த்தினார். அட்டைப்பட அமைப்பு முதலாக கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் உள்ளிட்ட ஒவ்வொரு அம்சங்களையும் தெளிந்து ஆராய்ந்து மதிப்பீட்டுரையினை வழங்கினார் டயானா நியூட்டன் அவர்கள். நிகழ்வில் இதழ் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், இலங்கை தொடர்பாளர் யாழ் பாவாணன் ஆகியோர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.

நன்றியுரையினை காசி ஜீவலிங்கம் வழங்கினார். ஏற்புரையினை 'இனிய நந்தவனம்' ஆசிரியர் சந்திரசேகரன் வழங்கினார். சிற்றிதழ் தொடரான வெளிவருதலில் பொருளாதாரம் என்பது முக்கிய பங்கு வகிப்பதனையும், பொருளாதாரத்திற்காக இலக்கியத்தை தள்ளி வைக்கவில்லை என்பதையும் இரண்டையும் சமமாக இனிய நந்தவனம் கொண்டு செல்வதனால்தான் 25 ஆண்டுகளை கடந்து இயங்குகிறது' என்பதை குறிப்பிட்டார் சந்திரசேகரன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலக்கிய விரும்பிகளும் இலக்கியப் படைப்பாளர்களும் பங்கேற்ற சிறப்பான நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்திருந்தது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :