அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் அணி சம்பியனாக தெரிவுஎம்.எப்.றிபாஸ்-
அக்கரைப்பற்று நீதிமன்ற சட்டத்தரணிகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கும், சட்டத்தரணிகளுக்குமிடையில் நல்லூரவை கட்டியெழுப்பும் வகையில் சிநேகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கிரிக்கட் சுற்றுப்போட்டி மாவட்ட, நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதி எம்.எச்.எம். ஹம்சாவின் வழிகாட்டலில் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.எம்.பகிஜ் தலைமையில் பள்ளிக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் இக் கிரிக்கட் சுற்றுப்போட்டி நடைபெற்றது(13)

இச்சுற்றுப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி, நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் அணி ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றியிருந்தன.

இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி போட்டியில் மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் அணியும், சட்டத்தரணிகள் அணியும் மோதின முதலில் துடுப்பெடுத்தாடிய மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் அணி 153 ஓட்டங்களைப்பெற்று 154 என்ற வெற்றி இலக்கை நோக்கி எதிர்த்தாடிய சட்டத்தரணிகள் அணி 107 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது 46 ஓட்டங்களால் மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.ரொக்க்ஷ் ,கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா, சம்மாந்துரை மாவட்ட நீதிபதி ரீ.கருணாகரன், கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம். றியாழ், நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன்,உட்பட சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.எம்.அப்பாஸ், எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பிரமாண்டாமான வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :