கடந்த 50 வருடத்திற்குள் 19 ஆயிரம் இறந்த உடம்புகளை இன,மத,வேறுபாடுகள் இன்றி இலவசமாக அடக்கம்அஷ்ரப் ஏ சமத்-
ஹுசைன் ராஷார்ட் ஜனாஸா பௌண்டேசன், ஹுசைன் போல்ட்
கடந்த 50 வருடத்திற்குள் 19 ஆயிரம் இறந்த உடம்புகளை இன,மத,வேறுபாடுகள் இன்றி அவரவர் மதத்திற்கு ஏற்ப அவரது சொந்த வாகனத்தில் இலவசமாக அடக்கம் செய்துள்ளார்.
கொழும்பில் பாதையோரம் அநாதரவாக, கடல், பாதை, பஸ் நிலையம், புகையிரதம், இவ்வாறு எங்கெல்லாம் அநாதைப் பினம் கிடக்கின்றதோ. மேல் மாகணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள், விமானப்படை, கடற்படை, இாரானுவத்தினர் இலவச இறுதிச்சடங்கு பினங்களை எடுத்துச் செல்வதற்கு அழைப்பது கொழும்பில் உள்ள ஹூசைன் போல்ட் மாத்திரமே.......
அவர் வாட் பிளேஸில் வசிக்கும்போது தனது இளமைப் பருவத்தில் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அநாதரவாகக் கிடக்கும் பினங்களை அடக்கம் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் மகனும் அவரும் சேர்ந்து இந்த புனித சேவையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது........
கொவிட் காலத்தில் இவர் மட்டுமே 300 பினங்களை எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடதக்கது..............
நேற்று (17) வியாழக்கிழமை பி.எம்.ஜ.சி.எச்ல் அவருடைய ஜனாசா பவுன்டேசன் சக உறுப்பிணர்கள் இனைந்து அவரது ஜனாசா சேவைக்கு 50 பூர்த்தினை கொண்டாடினார்கள்.
இந் நிகழ்வில் அவரது மனைவி பிறந்த நாள் அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு மற்றும் மலேசியா உயர்ஸ்தானிகர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அகமத் முனவர் , சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த ஜக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் பரிஹில்லாஹ்வும் கலந்து கொண்டதோடு ஹசன் மௌலானா, மற்றும் சர்வமதத் தலைவகள் ஆசிர்வாதம் பெற்று அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது............ அத்துடன் அவர் அநாதரவற்ற குடும்பங்கள். பாடசலை மாணவ மாணவிகளுக்கும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :