கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினராக ஊடகவியலாளர் ஹுதா உமர் ஆளுநரால் நியமிப்பு !பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹுதா கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்நியமனம்  வழங்கிவைக்கப்பட்டது. கிழக்கின் பல்வேறு சமூக பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான நூருல் ஹுதா, ஆய்வு, விமர்சன, விவரண தொடர் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வரும் ஒருவராவார்.

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர், கிழக்கு மாகாண கணனி தொடர்பாடல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர், சிலோன் மீடியா போரம் பொருளாளர் பதவிகள் உட்பட பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதானியாகவும், முக்கிய பதவி நிலை உத்தியோகத்தராகவும் இருந்து வரும் இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :