நாட்டிலே பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஊடகங்களே! காரைதீவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பேச்சு.வி.ரி. சகாதேவராஜா-
நாடு கடந்த ஆட்சியில் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருந்த பொழுது அந்த நாட்டை மீட்டு பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஊடகங்களே. ஒரு நாட்டின் முதுகெலும்பு ஊடகம் என்றால் அது மிகைஅல்ல.

இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், காரைதீவில் வெற்றி நியூஸ் ஊடக மையத்தை திறந்து வைத்து பேசியபோது குறிப்பிட்டார்.
காரைதீவு வெற்றி நியூஸ் ஊடக மையத்திறப்பு விழா நேற்று முன்தினம்(17) ஞாயிற்றுக்கிழமை சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் சமய வழிபாடு கிரியைகளை மேற்கொண்டு,, ஆசியுரை நிகழ்த்தி அதனை ஆரம்பித்து வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நாடாவெட்டி புதிய ஊடக மையத்தை திறந்து வைத்தார்.

அங்கு கோடீஸ்வரன் மேலும் பேசுகையில்..

நாட்டிலே முன்னர் கோர ஆட்சி இடம் பெற்றது .ஏழு லட்சம் பேர் வேலை இழந்தார்கள். பிழையான கொள்கை, அத்தியாவசிய சேவை மற்றும் விவசாயத்திலே கை வைத்தார்கள். ஊழல்கள், மோசடிகள் மலிந்தன. நாடு பின் தள்ளப்பட்டது. இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஊடகமே.
இன்று அத்தகைய ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர எத்தனிக்கிறார்கள். அப்படியானால் ஊடகங்களின் குரல்வளை நசுக்கப்படும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அதனை முற்றாக எதிர்க்கின்றோம்.

கடந்த காலத்திலே தமிழுக்கும் தேசியத்துக்குமாக பயணித்த சிவராம் ,நடேசன், நிர்மலராஜன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால், இன்றும் அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் பக்க சார்பின்றி நியாயமாக ஊடக தர்மத்தின் படி சேவை ஆற்றியவர்கள்.
வெற்றி நியூஸ் இணையத்தள இளம் இளைஞர்கள் நீங்கள் பாக்கியசாலிகள். ஏனெனில் உங்களுக்கு பக்கபலமாக இலங்கையில் அதி சிறந்த ஊடகவியலாளர் அண்ணன் சகாதேவராஜா அவர்கள் இருப்பது நிச்சயமாக வெற்றி தரும்.
எனவே, சமூக ரீதியாக நீங்கள் இயங்கி பக்கச்சார்பற்று சிறப்பாக நீங்கள் இயங்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.

நிகழ்வில் சமூக சேவையாளர்களான கதிர்.செல்வபிரகாஷ் ஞானேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வெற்றி நியூஸ் இணையதளத்தைச் சேர்ந்த சங்கீத், சனுசன், தசானந்த் ஆகியோர் நோக்கம் பற்றி பேசினர்.
நிகழ்வில் காரைதீவு பிரதேசசபை செயலாளர் ஏ. சுந்தரகுமார், இளங்கவிஞர் விபுலசசி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :