ஓய்வு பெற்ற பிரதி அதிபர் அப்துல் நிஸார் கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்புஅஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் கடந்த 10 வருடகாலமாக பிரதி அதிபராக கடமையாற்றி 31வருடகால சேவைக் காலத்தினை பூர்த்தி செய்து ஓய்வு பெற்ற ஏ.எம்.அப்துல் நிஸார் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா கடந்த புதன்கிழமை பாடசாலை நலன்புரிக் குழுவினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகவும், மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் , சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலீக் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹறூன் , பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் , கணக்காளர் றுஷான் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் விசேட மலர்வெளியீடும் நடைபெற்றதுடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் நிஸார் அவர்களினால் எமது பாடசாலை ஆரம்பக் கல்வி மாணவர்கள் பயனடையும் வண்ணம் மாணவர்களுக்காக அடிப்படை தமிழ் அறிவுகளை உள்ளடக்கிய " அமுதமொழி " என்ற நூலும் சகல மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :