உலக அளவில் உள்ள இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இதில் பல் துறை சார்ந்த பல சாதனையாளர்கள் உலக அளவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். இவ்விருதில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினுடைய நிர்வாக குழு உறுப்பினரும் கலைப்பட்டதாரியமான ஏ.எம்.ரோஷன் அவர்களும் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்கின்ற இருவரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எம்.ரோஷன் இலங்கையில் மாத்திரமன்றி ஊடகத் துறைக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்த ஒருவர் என்பதுடன் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment