மத்திய முகாம் ஆதார வைத்திய சாலையில் சிரமதான நிகழ்வு!


லங்கை அடிப்படை உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளரும் நளிர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான எம்.ஏ. நளிர் தலைமையில் மத்திய முகாம் ஆதார வைத்திய சாலையில் சிரமதான நிகழ்வு ஒன்று இன்று (2023.07.14) இடம்பெற்றது.

குறித்த சிரமதான நிகழ்வில் மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.கே. பத்திரன, மத்திய முகாம் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி கே. ஐ.இசுறு பொடிக்காற உள்ளிட்ட அதிகாரிகளும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும், ஊழியர்களும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதேச வாசிகளும் கலந்து கொண்டனர்.

இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணும் வகையில் எம்.ஏ. நளிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற வேறுபாடுகள் அற்ற முறையில் அனைவரதும் பங்களிப்புடன் இந்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

பெருகிவரும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் வைத்தியசாலை வளாகத்தை சுத்தப்படுத்தும் நோக்கிலும் குறித்த சிரமதான நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்ககது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :