சவளக்கடையில் விபத்து! ஒருவர் இஸ்தாலத்தில் மரணம்!!வளக்கடை பூமரத்துச் சந்தியடையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஒருவர் மரணமாகியுள்ளதாக இலங்கை அடிப்படை உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், நளிர் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான எம்.ஏ. நளிர் தெரிவித்தார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாக குறித்த விபத்தும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக தெரிவித்த நளீர் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவால் அண்மைக்காலமாக பல விபத்துக்களும் மரணங்களும் ஏற்பட்டு வருவதாகவும் இவைகளை தடுக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்; தற்கால இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த நிதானத்துடன் வாகனங்களை செலுத்த முற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :