டெக்னோ பொறியியல் கண்காட்சி 2023



அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா பொறியியலாளர்கள் நிலையத்தினால் வருடா வருடம் மிகப்பாரியலவிலான டெக்னோ பொறியியல் கண்காட்சி 2023 அக்டோபர் 20,21,22 தேதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பொறியியல் துறை நவீனத்துவ கண்காட்சிகள், அத்துறைகள் சார்ந்த காட்சிகள் உலகலாவிய நிறுவனங்கள் கலந்து கொள்ளும் கண்காட்சிகள் மூன்று நாட்கள் நடைபெறும்.

மேற்படி விடயம் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் மாநாடு கொழும்பு மரினா பீச் ஹோட்டலில் 16.07.2023 ல் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா பொறியியலாளர்கள் நிலையத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர் கே.பி.ஜ.யு. தர்மபால தகவல்களை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தகவல் தருகையில் இந் நிலையத்தில் இக் கண்காட்சி வருடா வருடம் 1985 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள பிரதான பொறியியலாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் பட்ட பொறியியல் பட்டம் பெற்றவர்களும் நீண்ட கால சேவைகளைப் பெற்றவர்கள் இந்நிறுவனத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற. இவ் வருடத்தின் இலங்கையின் பொருளாதார துறையில் பொறியியலாளர்களின் பங்களிப்பு பயன்படுத்துதல். என்ற தொனிப்பொருளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அத்துடன் எமது நிறுவனத்தின் கீழ் . மின்சாரம், இலக்ரோனிக், சிவில், தொலைத்தொடர்பு, கணனித்துறை, கப்பல்துறை, விமானத்துறை போன்ற துறைகளில் உள்ள பொறியியலாளர்கள் எமது அமைப்பின் ஊடக பங்களிப்புக்களை நடைமுறைப்படுத்த உள்ளது.
.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா ஏற்றுமதி , இறக்குமதி அதிகார சபையின் தலைவர் கலாநிதி பொறியியலாளர் கிங்சிலி பேர்னாட், இங்கு கருத்து தெரிவிக்கையில் .
இலங்கையில் பல பில்லியன் ரூபாய்களை வருடா வருடம் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அரசாங்கம் இலவச சேவைகளை செய்து வருகிறது. இருந்தும் இத்துறைகளில் இருந்து நாம் இதுவரை மீள்ச்சி அடையவில்லை. இலவசக் கல்வியை இந் நாட்டு மாணவர்களுக்கு வழங்கும் 3 லட்சம் பேர் உயர்தரப் பரீட்சை எழுதியவர்களுள் 30-40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே உயர்கல்வித்துறைக்கு செல்கின்றனர். ஏனையவர்களின் எதிர்காலம் வீணாக செல்கிறது.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் இலங்கையில் பொறியியல் துறை மற்றும் தொழில்நுட்பத்துறையில் உலகளாவிய ரீதியில் எமது இளம் மாணவர்களை பயிற்சியளிப்போமானால் நாம் இத்துறையில் உலகளாவிய ரீதியில் தன்னிரைவு பெற முடியும். அத்துடன் இது துறையில் வெளிநாடுகளில் கூடிய சம்பளத்தில் நாம் தொழில் பெறவும் வாய்ப்பு வசதிகள் உண்டு. அதற்காக எமது நாட்டு இளம் சமுதாயத்தினர்கள் பொறியியல் துறையில் ஈடுபடுத்தல் வேண்டும் எனவும் கலாநிதி கிங்சிலி பேர்னாட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :