க‌ல்முனை உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ பிர‌ச்சினை; முஸ்லிம் காங்கிர‌ஸார் முசுப்பாத்தி காட்டுகிறார்க‌ள். -ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சிக‌ல்முனை உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ பிர‌ச்சினையை முஸ்லிம் காங்கிர‌சை சேர்ந்தோர் வேறு வேறு திசைக‌ளில் திருப்பி, பிர‌ச்சினைக‌ளை தீர்க்க முன்வ‌ராம‌ல் முசுப்பாத்தி காட்டுகிறார்க‌ள் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி குற்ற‌ம் சாட்டியுள்ள‌து.

இது ப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி கூறிய‌தாவ‌து,

க‌ல்முனை ம‌க்க‌ளின் அதிக‌ப்ப‌டியான‌ ஓட்டுக்க‌ளை 1989 முத‌ல் பெற்ற க‌ல்முனையின் ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள், எம்பிமார், உள்ளூராட்சி உறுப்பின‌ர்க‌ள், மாகாண‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் என‌ எவ‌ருமே க‌ல்முனை பிர‌ச்சினைக்கு தீர்வு காணாம‌ல் தேர்த‌ல் எட்டிப்பார்த்தால் ம‌ட்டுமே சுடுகுது ம‌டியைப்ப‌டி என‌ அல‌றுகிறார்க‌ள்.
ம‌க்க‌ள் ஒரு க‌ட்சிக்கு ஓட்டுப்போட்டு பிர‌திநிதிக‌ள் ஆக்குவ‌து புண்ணாக்கு விற்க‌ அல்ல‌, ம‌க்க‌ள் பிர‌ச்சினையையும் ஊர் பிர‌ச்சினைக‌ளையும் அர‌சிய‌ல் ரீதியில் தீர்க்க‌த்தான்.

ஒரு ம‌க்க‌ள் குழு ஒரு க‌ட்சிக்கு ஓட்டுப்போட்டு பிர‌திநிதிக‌ள் ஆக்குவ‌து சும்மா மாட்டுக்கு புண்ணாக்கு விற்ப‌த‌ற்கல்ல‌, மாறாக‌ ம‌க்க‌ள் பிர‌ச்சினைக‌ளை அர‌சிய‌ல் ரீதியாக‌ தீர்ப்ப‌த‌ற்குத்தான். க‌ல்முனையின் 90 வீத‌மான‌ முஸ்லிம் ம‌க்க‌ள் 1989ம் ஆண்டு முத‌ல் முஸ்லிம் காங்கிர‌சுக்கே வாக்க‌ளித்தும் இன்று ம‌க்க‌ள் என்ன‌ ந‌ட‌க்குமோ ஏது ந‌ட‌க்குமே என்ற‌ க‌ல‌க்கத்த்தில் வாழ்கிறார்க‌ள்.

இப்பிர‌ச்சினையை தீர்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் ப‌ல‌ கிடைத்தும் திர்க்க முடியாத‌ கையாகாத‌வ‌ர்களாக முஸ்லிம் காங்கிர‌சின‌ர் இருந்து கொண்டு த‌த்த‌ம‌து பத‌வியை ர‌சிப்ப‌திலும் ருசிப்ப‌திலுமே கால‌த்தை க‌ட‌த்திய‌த‌ன் விளைவு இன்றைய‌ க‌ல்முனையின் ப‌ரிதாப‌ நிலையாகும்.

க‌ட‌ந்த‌ ந‌ல்லாட்சியில் மாகாண‌ ச‌பை உள்ளூராட்சி அமைச்ச‌ராக‌ இருந்த‌ பைச‌ர் முஸ்த‌பா இந்த இப்பிர‌ச்சினையை தீர்க்க‌ இத‌ய‌ சுத்தியுட‌ன் முய‌ற்சித்தார்.

இதே அமைச்சின் பிர‌தி அமைச்ச‌ராக‌ முன்ன‌ர் ஹ‌ரீஸ் இருந்து ச‌ப்பித் தின்று துப்பியிருந்தார்.
பைச‌ர் முஸ்த‌பா அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது க‌ல்முனை பிர‌ச்சினைக்கு தீர்வு காண‌ முஸ்லிம் த‌ர‌ப்பையும் த‌மிழ் த‌ர‌ப்பையும் அழைத்திருந்தார். இது ப‌ற்றி பேச‌ முஸ்லிம் த‌ர‌ப்பில் ஹ‌ரீஸ் எம்பி ம‌ட்டும் வ‌ந்திருந்தார். ஹ‌க்கீம் ஒளித்து விட்டார். த‌மிழ் த‌ர‌ப்பில் சும‌ந்திர‌ன், ச‌ம்ப‌ந்த‌ன், ஹென்றி ம‌ஹேந்திர‌ன் உட்ப‌ட‌ ப‌ல‌ர் வ‌ந்திருந்த‌ன‌ர்.
நாம் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவின் ந‌ண்ப‌ர் என்ற‌ முறையில் க‌ல‌ந்து கொண்டோம்.

அந்த‌ப்ப‌க்க‌ம் பெரும் கோஷ்டி, இந்த‌ப்பக்க‌ம் ஹ‌ரீஸும் அர‌சிய‌ல் அதிகார‌ம் இல்லாத‌ நாமும் ம‌ட்டும். இது விட‌ய‌த்தில் சும‌ந்திர‌ன் வ‌ர‌லாம் ச‌ம்ப‌ந்த‌ன் வ‌ர‌லாம், ஹென்றி யார்? இவ‌ர் ஏன் இங்கு வ‌ர‌வேண்டும் என்றும் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் வ‌ந்தும் மு. கா த‌லைவ‌ர் வ‌ராம‌ல் விட்ட‌தும் ஏன் என‌ கேட்டு நாம் வெளிந‌ட‌ப்பு செய்தோம்.

முஸ்லிம் காங்கிர‌சின‌ர் ஹ‌ரீஸ், நிசாம், ஹ‌க்கீம் ஆகியோர் இத‌ய‌ சுத்தியுட‌ன் முய‌ன்றிருந்தால் பைச‌ர் முஸ்த‌பா அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது இத‌னை இல‌குவாக‌ தீர்த்திருக்க‌லாம்.

2002ம் ஆண்டு முத‌ல் நாம் சொல்லிவ‌ருகிறோம், முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ப‌து முஸ்லிம்க‌ளை ஏமாற்றுகிற‌து என்றும் அக்க‌ட்சியின் த‌லை முத‌ல் வால்வ‌ரை சுய‌ந‌ல‌ ஏமாற்றுக்கார‌ர்க‌ள் என்றும்.

இதை சொன்ன‌போதெல்லாம் ச‌மூக‌ம் எம்மை தூற்றிய‌து.

இப்போது அவ‌ர்க‌ளே ச‌வாலுக்கு ச‌வால் என‌ ம‌ல்லுக்க‌ட்டி முசுப்பாத்தி காட்டுகிறார்க‌ள்.

ஹ‌ரீஸ் த‌ர‌ப்பு என்றும் நிசாம் காரிய‌ப்ப‌ர் த‌ர‌ப்பு என்றும் ச‌வால் விட்டுக்கொண்டு தீர்வுக்கு முய‌ற்சிக்காம‌ல் முசுப்பாத்தி காட்டுகிறார்க‌ள்.

ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளை க‌ட்சியின் உய‌ர் பீட‌த்தில் வைத்துக்கொண்டு க‌ல்முனை பிர‌ச்சினையை நீதிம‌ன்ற‌ம் சென்று ச‌ட்ட‌ரீதியாக‌ ச‌ண்டை பிடிக்காம‌ல் மீடியாக்களில் ச‌ண்டை பிடிக்கும் முட்டாள் கூட்ட‌ம் போன்று இருப்ப‌தை நாம் வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம்.

இந்த‌ ச‌வால்க‌ள் க‌ல்முனை ம‌க்க‌ளை உசுப்பேற்றுமே த‌விர‌ பிர‌ச்சினைக்கு தீர்வு காண்ப‌தை இழுத்த‌டிக்கும் முய‌ற்சியாகும்.

இர‌ண்டு பூனைக‌ளையும் மோத‌ விட்டு ஒரு குர‌ங்குத் த‌லைமை புதின‌ம் பார்க்கிற‌து.
ஆக‌வே க‌ல்முனை ம‌க்க‌ள் முஸ்லிம் காங்கிர‌சுக்கு கொடுத்த‌ ஆணையை நிறைவேற்றி க‌ல்முனையை சாய்ந்த‌ம‌ருது, க‌ல்முனை, பாண்டிருப்பு என்ற‌ மூன்று ச‌பைக‌ளாக‌ பிர்ச்க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ ஹ‌க்கீம் த‌லைமையில் அர‌ச‌ உய‌ர் த‌ர‌ப்பில் பேச‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி
(ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :