தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வாய்ச்சுகாதாரப்பிரிவு ஆரம்பித்து வைப்பு



பாறுக் ஷிஹான்-
லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்தில் 'வாய்வழி சுகாதாரப் பிரிவு' (பல் மருத்துவப் பிரிவு) புதன்கிழமை(17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ் பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் ஏனைய பிரிவுத்தலைவர்களும் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சார்பில் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் பதிவாளர் மற்றும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மாணவர் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைந்து பல்வேறு செயறிட்டங்கள் கருத்திட்டங்களை அமுல்ப்படுத்தி வருகின்றன. இதற்கமைவாக கடந்த ஆறு மாத காலமாக பேசப்பட்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வாய் சுகாதார மேம்பாட்டுப்பிரிவு இன்று 2023.05.17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் பணிமனையின் பிரிவுகளினால் மாணவர்கள் மற்றும் கல்விச்சமூகத்திற்கான விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்வதென்ற இருதரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளை அறிவித்தோம்.இதற்கமைய திறந்து வைக்கப்பட்ட பல்கலைக்கழக சமூகத்தின் நீண்ட நாள் தேவையை இந்த பிரிவு பூர்த்தி செய்கிறது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரிடம் நாம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த அலகுக்கான யோசனை நடைமுறைக்கு வந்தது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் ஆகியோருடன் இணைந்து எமது கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்ததுடன் பல்கலைக்கழகத்தில் அலகை நிறுவுவதற்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்கினர் தென்கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி நிலைமையைக் கருத்திற்கொண்டு பயன்படுத்தாமல் இருந்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பெரும் சிரமத்திற்கு மத்தியில் திருத்தி மீளமைத்து குறித்த வாய்ச்சுகாதாரப்பிரிவினை ஆரம்பித்ததன் மூலம் மாணவர்கள் தேவையற்ற விடுமுறைகளை எடுத்து வெளியில் சென்று மருத்துவங்களை பெறுவது தவிர்க்கப்பட்டிருப்பதுடன் பயணச்செலவுகளும் தவிர்க்கப்பட்டுள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :