பாடசாலைக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி உபகரணங்கள் அன்பளிப்பு.வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திற்கென ஒலிபெருக்கி உபகரணங்களை பாடசாலை அபிமானியொருவர் நேற்று வழங்கினார்.

இவ் உபகரணங்களை நாவிதன்வெளியை வசிப்பிடமாக கொண்ட தனவந்தரும் கொடையாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான இந்திரன் ரூபசாந்தன் வழங்கி வைத்தார்.

பாடசாலை அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனிடம்
பாடசாலைக்கான Box ; mike; stand ஏனைய சகல உபகரணங்களையும் 250000/( இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம்ரூபாவிற்கு ) இற்கு கொள்வனவு செய்து வழங்கி வைத்த நிகழ்வு சிரேஸ்ட ஆசிரியர் ந.கோடீஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
நாவிதன்வெளியை வசிப்பிடமாக கொண்ட தனவந்தரும் கொடையாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான இந்திரன் ரூபசாந்தன் அவர்களை இத்தருணத்தில் அதிபர் பிரதி அதிபர் பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கல்விசாரா ஊழியர்கள்பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பழைய மாணவர்சங்கம் சார்பில் மனதார வாழ்த்தினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :