அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு மக்கள் மீண்டும் வரிசையில்பாறுக் ஷிஹான்-
மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல்- அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்

மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(30) இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.
கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் கா முடிகின்றது.

மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :