பாதயாத்திரையில் வந்த யாழ் .யாத்திரீகர் மாமாங்கத்தில் திடீர் மரணம் !வி.ரி.சகாதேவராஜா-
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து கடந்த மாதம் ஆறாம் தேதி முதல் பாதயாத்திரையில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாணம் யாத்திரீகர் ஒருவர் மட்டக்களப்பு மாமாங்கத்தில் திடீர் மரணமானார்.

இச் சம்பவம் நேற்று(29) திங்கட்கிழமை காலை 6:30 மணி அளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த கே. சிவலிங்கம் (வயது 70 ) என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர்.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் 62 பேர் கொண்ட யாத்திரிகர்கள் கடந்த 23 நாட்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு மாமாங்கத்தை வந்தடைந்த அவர்கள் நேற்று காலை அங்கிருந்து புறப்பட இருந்தசமயம் இந்த மரணம் சம்பவித்திருக்கின்றது.

மட்டக்களப்பு போலீசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் சடலத்தை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி கூறுகையில்...
கடந்த ஏழு வருட காலமாக யாத்திரிகர் சிவலிங்கம் எங்களுடன் பயணித்து வருபவர். வழமை போல இன்று காலை மாமாங்க ஆலயத்தில் பஜனை முடித்த பிற்பாடு நாங்கள் பணிஸ் மற்றும் தேநீரை அருந்திவிட்டு புறப்பட இருந்த சமயம் சிவலிங்கம் துள்ளி குதித்தாடி சந்தோஷத்தில் இருந்தார்.

மறுகணம் அவர் மயக்கமுற்று சரிந்து விழுந்த உடனே நாங்கள் அம்புலன்ஸ்க்கும் 119க்கும் தகவல் கொடுத்தோம். அங்கிருந்து ம்புலன்ஸ் வருவதற்கு இடையில் அவரது உயிர் பிரிந்து விட்டது.
எனவே ம்புலன்ஸ் பிரேதத்தை ஏற்ற முடியாது என்று கூறி சென்று விட்டார்கள்.
பின்பு நாம் போலீசார் உடன் தொடர்பு கொண்டோம்.
போலீசார் மரணவிசாரணை அதிகாரி வந்து என்னையும் இன்னும் சிலரையும் விசாரணைக்குட் படுத்தினார்கள். அதன் பின்பு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. இன்று பகல் கல்லடி ராமகிருஷ்ண மிஷினிலே எங்களுக்கு மதியபோசனமிருந்தது. இந்த வேளையிலே இந்த சம்பவ இடம்பெற்றது .எனது பாதயாத்திரை வரலாற்றில் பாதை யாத்திரையின் பொழுது ஒருவர் மரணித்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கின்றது. என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :